சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு
  • தமிழார்வலர்களே வணக்கம்

    சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு
    நன்றி: தினமணி 25-11-2008 செய்தி

    தமிழ் வளர்ச்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வெளிவரும் சிறந்த தமிழ்
    மென்பொருளுக்கு (பத்திரிகை வெளியீட்டில் சாஃப்ட்வேர் என்றுதான்
    குறிப்பிட்டுள்ளார்கள்!!!) தமிழக அரசு 'கணியன் பூங்குன்றனார்' பெயரில் ரூ. 1
    லட்சம் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்க முடிவு செய்துள்ளது. மென்பொருள்
    ஒருவராலோ, கூட்டுமுயற்சியாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். கூட்டுமுயற்சி எனில்,
    பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள ரூ.100
    பதுவுக் கட்டணத்துடன் 31-12-2008 க்குள்விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
    தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
    தமிழ் வளர்ச்சி வளாகம்,
    முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை 600008.
    மேலும் விவரங்களுக்கு : தொலைப்பேசி: 91-44- 2819 0412, 2819 0413

    தமிழ் மென்பொருள் வல்லுநர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறும் அன்பன்,
    மரபூர் ஜெய. சந்திரசேகரன்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters