Poetry In Stone|கல்லிலே கலைவண்ணம் கண்டோம் has posted a new item, '250th post. Someone has to swallow the bitter poison| 250 ஆவது பதிவு. விடமுண்ட கண்டரே.. விஷபாஹரணரே! யாருக்காக விஷத்தை உண்டீர்?'
[lang_en]
It has been an extraordinary journey for me and must thank all those who have stood by me and traveled along with me on this incredible odyssey. Yes, we are coming up with the 250th post today. They are all in my hearts and though i mention only one today - each and everyone of [...]
இறைவன் ஆலம் உண்டதைத் தேவாரம் அவன் லீலையாகச் சொல்வது போலவே, அவன் விடம் உண்டதை வேறு இருவர் மிக அழகாகச் சொல்கிறார்கள்.
ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில், அம்மா, உன் தாடங்கத்தின் ( தோடுகளின்) மகிமையால் அல்லவோ சிவன் விடம் உண்டும் உயிரோடு உள்ளன் என்கிறார். அதாவது, அம்பிகையின் மாங்கல்ய பலத்தாலேயே சிவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்கிறார்.
Sudham apy asvadya pratibhaya-jaraa-mrtyu-harinim
Vipadyante visve Vidhi-Satamakhadya divishadah;
Karalam yat ksvelam kabalitavatah kaala-kalana
Na Sambhos tan-mulam tava janani tadanka-mahima.
Oh, mother mine,
Gods like Indra and brahma,
Who have drunk deep the nectar divine,
Which removes the cruel aging and death,
Do die and disappear.
But Shambu thy consort,
Who swallowed poison that is potent,
Does never die,
Because of the greatness,
Of thine ear studs.
மற்றவர் நம் கவி காளமேகம். ஆலங்குடி தலத்தில் இறைவன் விடம் உண்டதாக புராணம் கூறுகிறது. ஆலம்குடி என்ற வார்த்தையை வைத்து அவர் எழுதிய சிலேடை.